Teaser release of Yogi Babu starrer Lucky Man

Photos
Detailed Information

யோகி பாபு நடித்துள்ள லக்கி மேன் படத்தின் டீசர் வெளியாகி தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘லக்கி மேன்’. திங்க் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இப்படத்தை பாலாஜி வேணுகோபால் இயக்கியுள்ளார். யோகி பாபு கதையின் நாயகனாக நடிக்க வீரா, ரேச்சல் அமித் பார்கவ், அப்துல் லீ, ஆர்.எஸ்.சிவாஜி, ரேச்சல் ரேபேக்கா மற்றும் பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். உண்மையான அதிர்ஷ்டம் என்றால் என்ன என்பதைக் கண்டறியும் ஒரு மனிதனின் வாழ்க்கையைப் பேசும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டது. இந்நிலையில் இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Nearby Listings